671 கோடிக்கு சொந்தக்காரர்! 20வது மாடியில் இருந்து குதித்து மரணம்
அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர் 20வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மைக்கேல் கிளைன்
Fandango நிறுவனர் டைகூன் ஜே. மைக்கேல் கிளைன் (Tycoon J.Michael Cline) 80.3 மில்லியன் டொலர்களுக்கு (671 கோடி) சொந்தக்காரர் ஆவார்.
64 வயதான இவர், செவ்வாய்கிழமை காலை மன்ஹாட்டனில் உள்ள ஹொட்டல் ஒன்றின் 20வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார்.
நியூயார்க் காவல்துறையின் அறிக்கையின்படி, குறித்த ஹொட்டலுக்கு சென்ற அதிகாரிகள் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் கிடந்த நபர் ஒருவரைக் கண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதனையடுத்து மைக்கேல் கிளைனின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Juxtapose-யின் செயல் தலைவராக இருந்த மைக்கேல் கிளைன், விலங்கு பாதுகாப்பின் வழக்கறிஞராகவும், தேசிய மீன் மற்றும் வனவிலங்கு அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.