சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன!
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள் விமானசேவைகள் ஊடக நிறுவனங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. லண்டனின் பங்குசந்தை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அவசரசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ,வணிகவளாங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன,கணிணிகள் செயல் இழந்துள்ளதால் ஊடக நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.