;
Athirady Tamil News

அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதியை கொல்ல முயன்றார்கள்! மேடையில் சட்டையை கிழித்து கர்ஜித்த WWF பிரபலம்

0

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில், டொனால்டு டிரம்ப்பிற்கு ஆதரவாக WWF வீரர் ஹல்க் ஹோகன் தனது டி-ஷர்ட்டை கிழித்த வீடியோ வைரலாகியுள்ளது.

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கலந்துகொண்டார்.

WWFயின் பிரபல வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) மேடையில் டிரம்ப் மீதான கொலை முயற்சியை குறிப்பிட்டு, அவருக்கு ஆதரவாக ஆவேசமாக பேசினார்.

என் ஹீரோவை அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்
அவர் பேசுகையில், ”போன வாரம் என்ன நடந்தது…என் ஹீரோவை அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்…அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதியை கொல்ல முயன்றனர்!” என முழக்கமிட்டார்.

அத்துடன் அவர் அணிந்திருந்த ‘Real American’ என பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை கிழித்து எறிந்தார். உள்ளே அவர் அணித்திருந்த மற்றொரு டி-ஷர்ட்டியில் ‘Trump Vance’ என எழுதப்பட்டிருந்தது.

தொடர்ந்து பேசிய ஹல்க் ஹோகன், ”எனக்கு கடினமானவர்களைத் தெரியும், ஆனால் நான் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன் சகோதரா, டொனால்டு டிரம்ப் அவர்கள் அனைவரையும் விட கடினமானவர். டிரம்ப் ஒரு உண்மையான அமெரிக்க ஹீரோ என்பதை உலகம் அறிய வேண்டும்.

மேலும், இந்த அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக எனது ஹீரோவை ஆதரிப்பதில்லை பெருமிதம் கொள்கிறேன், ஏனெனில் நான் இன்றிரவு இங்கே இருக்கிறேன்” என்று கூறியதுடன், டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவர்களை கடுமையாக சாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.