கொத்தமல்லியை தண்ணீரில் அவித்து குடித்து பாருங்க இந்த நோய் கிட்டகூட வராது!
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் வீட்டில் உள்ள மருத்துவ பொருட்களை பயன்படுத்துவது அவசியம் என்பது ஆயுள்வேத மருத்துவரின் கருத்தாகும்.
கொத்தமல்லி தண்ணீர்
கொத்தமல்லி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். இதை இரவில் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் அதை காலையில் அவித்து குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை குறைக்க உதவும். இந்த விதைகளை சதாரணமாக நினைப்பது தவறு. இதில் வைட்டமின் கே சி மற்றும் ஏ போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
உடிலில் நச்சுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் இந்த கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் அது இல்லாமல் போகும். முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் கொத்தமல்லி தண்ணீர் குடிக்கலாம்.
குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இந்த செயன்முறை செய்வது நல்லது. செரிமான பிரச்சனை இருப்பவர்கள் இதை குடிக்கலாம். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இது மிகவும் உதவி செய்கின்றது.
இந்த ஆரோக்கியமுள்ள கொத்தமல்லி நீரை நீங்கள் வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடிப்பது நல்லது. தலை சுற்றுவது ரத்தசோகை போன்ற நோய்களும் குணமாகும். இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.