;
Athirady Tamil News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா அஞ்சலை கைது… போலீசார் அதிரடி!

0

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் கொலையாளிகள் நெட்வொர்க் அதிர வைக்கும் வகையில் நீண்டுகொண்டே செல்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மலர்கொடி என்ற பெண் தாதா கைது செய்யப்படுள்ளார். தற்போது பாஜகவில் இருந்து நீகப்பட்டுள்ள அஞ்சலை என்ற பெண் தாதாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மலர்கொடிக்கு, அதிமுக பிரமுகர், வழக்கறிஞர் உள்ளிட்ட அடையாளங்கள் அண்மையில் கிடைத்தவை. அதற்கு முன்பு அவர் சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் சி பிரிவு ரவுடி பட்டியலில் இருந்தவர்.

யார் இந்த பெண் தாதா அஞ்சலை?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு பெண் தாதாவான அஞ்சலை தலைமறைவாகி இருந்தார். புளியந்தோப்பைச் சேர்ந்த அவரை ‘கஞ்சா’ அஞ்சலை என்றே அழைக்கின்றனர். புளியந்தோப்பு, ஓட்டேரி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த மொத்த வியாபாரி எனவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆம்ஸ்ட்ராங்கால் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட ஆற்காடு சுரேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர். அஞ்சலை மீது கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி உள்ளிட்ட 10-கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் துறையின் ஏடுகளில் பி பிரிவு சரித்திர பதிவு குற்றவாளியாவார். 2019-இல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்த அவர் வெளியே வந்த பின்னர் பாஜக-வில் இணைந்தார். பாஜக வடசென்னை மகளிரணி துணைத் தலைவராக இருந்தார். அவரை கட்சிப் பொறுப்பிலிருந்து பாஜக தலைமை நீக்கியுள்ளது.

15 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ஆற்காடு சுரேஷ், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி, பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் இருக்கிறார் என்பதாலேயே ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு தலைமையிலான கோஷ்டி கடந்த 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்தது. ஆம்ஸ்ட்ராங் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்டு உளவு பார்த்து அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததே தலைமறைவாக உள்ள அஞ்சலை தான் என கூறப்படுகிறது.

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பதிலடியாக அஞ்சலை ஸ்கெட்ச் போட்டு உளவு பார்த்து கூலிப்படையை ஏவிய நிலையில், தோட்டம் சேகரின் கொலைக்கு பழிவாங்க மலர்க்கொடி, பணப்பட்டுவாடா செய்து ஆம்ஸ்ட்ராங் கதையை இருவருமாக சேர்ந்து முடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அஞ்சலை பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வந்த அஞ்சலை, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்தது தெரியவந்ததால், மாநிலத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் மலர்கொடியை தொடர்ந்து மற்றொரு பெண் தாதா அஞ்சலையும் சிக்கியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்குற்றவாளிகளுக்கு பண உதவி செய்த குற்றச்சாட்டில் அஞ்சலையை பிடித்துள்ளது காவல்துறை.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அஞ்சலை சென்னை புளியந்தோப்பில் தலைமறைவாக இருந்த போது காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்பா செந்திலை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.