;
Athirady Tamil News

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : முக்கிய சுகாதார சேவை அதிகாரிளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

0

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை இம் மாதம் 7ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர்.

தொலைபேசி முறைப்பாடுகள்
பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த களவிஜயத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் சார் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அழைப்பு கடிதம்
அதன் அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு எதிர்வரும் 30.07.2024 பிற்பகல் 1.30 மணிக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கலந்துரையாடலுக்கு பின்வருவோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

01. செயலாளர்- சுகாதார அமைச்சு, கொழும்பு

02.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்-சுகாதார அமைச்சு, கொழும்பு

03.மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்- வடக்கு மாகாணம்

04.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- வடக்கு மாகாணம்

05.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- யாழ்ப்பாணம்

05.மருத்துவ அத்தியட்சகர்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை

You might also like

Leave A Reply

Your email address will not be published.