இலங்கை வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் பாரிய தீ; ஒருவர் உயிரிழப்பு
இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் நேற்று (19) மாலை பாரிய தீ விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த கப்பல் இந்தியாவின் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது கோவாவின் தென்மேற்கே உள்ள கார்வார் கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
MV Maersk Frankfurt என்ற கப்பலே தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் கப்பலின் முன் பகுதி வெடித்துள்ளதுடன் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கப்பலில் பிலிப்பைன்ஸ், மாண்டினெக்ரின் மற்றும் உக்ரைன் நாட்டவர்கள் உட்பட 21 பணியாளர்கள் இருந்துள்ளனர் கப்பலில் தீ மேலும் பாரவாமல் இந்திய கடலோர காவல்படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
“அவசர தீ விபத்தின்போது நீர்த்தாரைக்காக பயன்படுத்தப்படும் டோர்னியர் (Dornier) ரக விமானம் அனுப்பப்பட்டது.
இந்தக் கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்கள் (ஐஎம்டிஜி) ஏற்றிச் சென்றதாகவும், கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.