;
Athirady Tamil News

பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

0

பங்களாதேஷில்(Bangladesh) நடைபெறும் மாணவர்களின் போராட்டம் காரணமாக அந்நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இலங்கை(Sri lanka) மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு(Ministry of Foreign Affairs) நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், பங்களாதேஷில் 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் பயின்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

பங்களாதேஷ் போராட்டம்
இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

எனவே பங்களாதேஷில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் கேள்வியெழும்பியுள்ளது.

மேலும், மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படவும் இல்லை.

இலங்கை மாணவர்களின் நிலை
இந்நிலையிலேயே வெளிவிவகார அமைச்சு இலங்கை மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கி இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், மாணவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நேரில் பார்வையிட்டதுடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டத்தில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் போராட்டக்காரர்களின் மரணத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.