44.6 மில்லியன் டொலருக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு: யார் வாங்கியது தெரியுமா?
டைனோசர் எலும்பு கூட்டை 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கிய பில்லியனரின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது.
150 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு
44.6 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்ட இந்த stegosaurus டைனோசரின் எலும்புக்கூடு சுமார் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.
Apex என்ற பொருத்தமான பெயருக்கு ஏற்றவாறு கிட்டத்தட்ட 11 அடி (3.3 மீட்டர்) உயரம், 27 அடி (8.2 மீட்டர்) நீளமும் கொண்ட கிட்டத்தட்ட முழுமையான டைனோசர் எலும்பு கூடு இதுவாகும்.
மொத்தம் 319 எலும்புகளில் இதில் சுமார் 254 எலும்புகள் உள்ளன.
இது லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள “Sophie” என்ற stegosaurus எலும்புக்கூட்டை விட 30 சதவீதம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
44.6 மில்லியன் டொலருக்கு ஏலம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஏலத்தில், Citadel நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO-வான Ken Griffin இந்த டைனோசர் எலும்புக் கூட்டை மிகப்பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளார்.
அவர் இதற்காக கிட்டத்தட்ட 44.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட்டுள்ளார், இதன் மூலம் Apex இதுவரை விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த தொல்லுயிர் எச்சம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஏலத்திற்கு பிறகு பேசிய Ken Griffin, “Apex” அமெரிக்காவில் பிறந்தது, இனியும் அமெரிக்காவிலேயே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.