உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் எண்ணெய் எதுக்கெல்லாம் சிறந்தது தெரியுமா?
ஆலிவ் எண்ணெய்யில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதை உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆலிவ் எண்ணெய்
பொதுவாக எந்தவகை எண்ணெய்யாக இருந்தாலும் அது உடலுக்கு நன்மை தரும். இதனால் தான் மனிதர்கள் இதை சமையலில் சேர்க்கின்றனர். அதே போல தான் ஆலிவ் எண்ணெய் இதில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
இந்த எண்ணெய சாப்பிடுவதால் உடலில் இருக்கும் இருக்கும் கொலஸ்ரால் குறைகிறது. இதனால் இதய நோய் அபாயம் தடுக்கப்படும். ஆலிவ் எண்ணெயில் இன்சுலின் அளவை பராமரிக்க கூடிய மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கி இருப்பதால் இது நீரழிவு நோய்க்கு சிறந்ததாக கூறப்படுகின்றது.
உடல் பெலிவு பெறுவதில் இது முக்கிய பங்குவகிக்கிறது. இதை உணவில் சேர்த்து கொள்வதால் ரத்த ஓட்டம் சீராகி, உடல் பொலிவோடும், சுறுசுறுப்புடனும் இருக்கும். செரிமான கோளாறுகளை சரிசெய்து, மலச்சிக்கல் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.
ஆலிவ் எணணெயை சாதாரணமாக நினைக்காமல் அதை ஒவ்வொரு முறையும் உணவில் சேர்த்து காள்வது நன்மை தரும்.