;
Athirady Tamil News

அம்மா உணவகம்; எச்சில் உணவை பாத்திரத்தில் எரிந்த முதல்வர் ஸ்டாலின் – வலுக்கும் கண்டனம்!

0

எச்சில் உணவை முதல்வர் ஸ்டாலின் பாத்திரத்தில் எரிந்த சம்பவத்திற்கு கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது.

அம்மா உணவகம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களது ஆட்சியில் இந்த அம்மா உணவகமானது திறக்கப்பட்டது. இங்கு மிகவும் குறைந்த விலையில், உணவுகள் வழங்கப்படுகிறது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அம்மா உணவகங்கள் கைவிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், அம்மா உணவகங்களை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, நேற்று திடீரென முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்கிருந்த வருகை பதிவேட்டை ஆய்வு செய்து, நாள்தோறும் எத்தனை பேர் வந்து சாப்பிடுகிறார்கள்? அங்கு சாப்பிட்டவர்களிடமும் உணவு தரம் போன்றவற்றை விசாரித்தார். அதோடு அங்கிருந்த உணவையும் எடுத்து ருசி பார்த்தார்.

எச்சில் உணவை..
இந்த சூழலில் தான், ஸ்டாலின் ருசி பார்த்துவிட்டு கையில் வைத்திருந்த எச்சில் உணவை சாப்பாடு இருந்து பாத்திரத்திலேயே வீசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதாவது, அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த சாம்பார் சாதத்தை ருசி செய்துவிட்டு எச்சில் சாப்பாட்டை அதன்மீதே உதறிவிட்டார்.

இதனை பார்த்த பலரும் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். பொதுமக்களுக்காக வைத்திருக்கும் உணவை வெறும் கையில் எடுத்து சுவைத்துவிட்டு, கையிலிருந்த மீதமிருந்த எச்ச உணவை மீண்டும் அதே பாத்திரத்தில்,

உதறுவது தான் திராவிட மாடலா? என சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தனியாக ஒரு தட்டிலோ அல்லது ஸ்பூனிலோ எடுத்து சுவைத்திருக்கலாம் என்றும் அறிவுறுத்திவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.