யாழில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிமோனியாவால் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த சிவதாசன் றக்ஸ்மி எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழைந்தை நேற்றைய தினம் சனிக்கிழமை பால் குடித்த சில மணி நேரத்தில் அசைவின்றி காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து குழந்தையை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
குழந்தையின் இறப்பிற்கு நிமோனியாவே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.