இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த ஆண்டின் (2023) முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை பெட்ரோலிய சட்டபூர்வ கூட்டுத்தாபனத்தின் இலாபமானது இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 13.6 பில்லியன் ரூபாவாக 68.7 வீதத்தால் வெகுவாகக் குறைந்துள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியம் சட்டபூர்வ கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 43.4 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது.
சந்தையில் புதிய போட்டியாளர்கள்
புதிய போட்டியாளர்கள் சந்தையில் நுழைந்தமை, பெட்ரோலியம் இறக்குமதி குறைந்ததால் இறக்குமதி செலவு குறைந்துள்ளது.
2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதிச் செலவு 648.71 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதுடன், இந்த நிலைமை காரணமாக இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் விற்பனைச் செலவு 13.5 வீதத்தால் குறைந்து 337.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.
எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் வருமானம்
இதன் காரணமாக, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் வருமானம் 16.6 வீதத்தால் 389.1 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.