;
Athirady Tamil News

மோசமான வானிலையால் லண்டன் ஹாட் ஏர் பலூன் திருவிழா ரத்து

0

மோசமான வானிலை காரணமாக நேற்று காலை லண்டனில் திட்டமிடப்பட்ட ஹாட் ஏர் பலூன் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

இதன்மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஹாட் ஏர் பலூன் திருவிழா கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The Lord Mayor’s Hot Air Balloon Regatta என அழைக்கப்படும் இந்த நிகழ்வு 2019 முதல் நடத்தப்படவில்லை. கோவிட் தோற்று காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் இது சாத்தியப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகள் மோசமான வானிலை காரணமாக நடத்தப்படவில்லை.

2019-ஆம் ஆண்டிலிருந்து நடைபெறாமல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இந்த ஆண்டில், ஏற்கெனெவே இரண்டு வாரங்களுக்கு முன் 7-ஆம் திகதி திட்டமிடப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமைக்கு (இன்று) மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் திடீர் வானிலை மாற்றம் நிகழ்வுக்கு எதிராக சதி செய்துவிட்டது.

இது லண்டன்வாசிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இருப்பினும், இந்நிகழ்வு நடக்கும் என இன்னும் நம்பிக்கை இருப்பதாக அறிவித்துள்ள அமைப்பாளர்கள், அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஜூலை 28-ஆம் திகதிக்கு மாற்றியமைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.