;
Athirady Tamil News

காசாவில் அடையாளம் காணப்பட்ட கொடிய வைரஸ்

0

காசா பகுதியில் மிக விரைவாகப் பரவக்கூடிய போலியோ வைரஸின் (Polio Virus) திரிபு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மாதிரிகளில் இருந்தே இந்த வைரஸின் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும் ஆபத்து

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், அந்த நபர்களுக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் பாலஸ்தீனியர்கள் பெரும் ஆபத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பும் காசாவின் சுகாதார அமைச்சக அதிகாரிகளும் கூறுகின்றனர்.

இது போலியோ வைரஸின் திரிபு VDPV2 என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த மாதம் கான் யூனிஸ் மற்றும் டெய்ரா அல்-பலா ஆகிய இடங்களில் சேகரிக்கப்பட்ட 6 மாதிரிகளில் இந்த வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.