இலங்கை வைத்தியசாலை ஒன்றில் வேகமாக குறைவடையும் பிறப்புவீதம்
1914 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மஹ்மோதரா மகப்பேற்று வைத்தியசாலையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான 05 வருட காலப்பகுதியில் பிரசவங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துள்ளதாக வைத்தியசாலையினால் ஜூலை 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை, மஹ்மோதரா மகப்பேற்று மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 10,366 ஆகவும், 2023 இறுதியில், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7,337 ஆகவும் குறைந்துள்ளது.
குழந்தைகளின் பிறப்பு
2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், அந்த மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3,303 ஆகும்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, 2022ல் மஹ்மோதரா மகப்பேற்று மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 8,333 ஆகக் குறைந்துள்ளது.
புதுமணத் தம்பதிகள்
மஹ்மோதர மகப்பேறு வைத்தியசாலை 27 மார்ச் 2024 முதல் கராப்பிட்டிய வைத்தியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது மஹ்மோதர வைத்தியசாலைக்கு இலங்கை நட்பு வைத்தியசாலை என பெயரிடப்பட்டுள்ளது.
புதுமணத் தம்பதிகள் பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக மாற்றங்கள், காரணமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாக ஜேர்மன் இலங்கை நட்புறவு மருத்துவமனையின் இயக்குநர் கே.ஏ. சோமரத்ன கூறுகிறார்.