விலகிய பைடன்: டிரம்பை வீழ்த்துவேன்…..! புதிய வேட்பாளர் கமலா ஹரிஸ் சூளுரை
ஜனநாயக கட்சியை ஓரணியாக திரட்டி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்பை தோற்கடித்து வீழ்த்திக் காட்டுவோம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ( Kamala Harris) சூளுரைத்துள்ளார்.
அமெரிக்க (United States) ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் (Joe Biden) தற்போது தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்து கமலா ஹரிஸை முன்னிறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் உள்ளிட்டோரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசி ஆதரவு திரட்டி வருகின்றார்.
எளிதில் வெற்றி
மேலும், இந்த தேர்தலில் தன்னை முன்னிறுத்தியதற்காக ஹரிஸ் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து, ஜனநாயக கட்சியை ஓரணியாக திரட்டி, இந்த தேர்தலில் டிரம்பை தோற்கடித்து வீழ்த்திக் காட்டுவோம் என்று சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் (Kamala Harris) வேட்பாளராக நிறுத்தப்பட்டால் “நான் எளிதில் வெற்றி பெற்று விடுவேன்” என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
தற்போதைய அமெரிக்க (USA) ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) அமெரிக்க தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.