;
Athirady Tamil News

ரகசிய காதலரை முத்தமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை… எச்சரித்த இளவரசர் ஹரி: பலித்த எச்சரிக்கை

0

ஒலிம்பிக் வீராங்கனை ஒருவர் தங்கம் வென்றதும், தன் ரகசிய காதலரை முத்தமிட்டுள்ளார். அப்போது இளவரசர் ஹரி அவர்களை எச்சரித்துள்ளார்.

பின்னர், ஹரி எச்சரித்ததுபோலவே நடந்ததாக தெரிவித்துள்ளார் அந்த ஒலிம்பிக் வீராங்கனை!

ரகசிய காதலரை முத்தமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை…
2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது, பிரித்தானிய தடகள வீராங்கனையான லாரா (Laura Trott) தங்கம் வென்றதும், தன் மழ்கிச்சியை வெளிப்படுத்த, தன் ரகசிய காதலரான ஜேசனை (Jason Kenny) முத்தமிட்டுள்ளார். அதாவது, அவர்கள் இருவரும் காதலித்துவந்தது, அப்போது யாருக்கும் தெரியாது.

அப்போது, இளவரசர் ஹரி அவர்களை எச்சரித்தாராம். நீங்கள் உங்களைச் சுற்றி புகைப்படக்கலைஞர்கள் இருக்கும்போது எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்று கூறினாராம் ஹரி.

அப்போது, நம்மை யார் கண்டுகொள்ளப்போகிறார்கள் என்று எண்ணினார்களாம் ஜேசனும், லாராவும்.

ஆனால், மறுநாள், எல்லா பத்திரிகைகளிலும் லாராவும் ஜேசனும் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன!

இப்போது திருமணம் செய்து தம்பதியராகி, இரண்டு பிள்ளைகளுக்கு பெற்றோராகிவிட்டாலும், ஹரியின் எச்சரிக்கையை நினைவுகூர்ந்துள்ளார் லாரா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.