குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்.., தூய்மை பணியாளர் செய்த நெகிழ்ச்சி செயல்
தவறுதலாக குப்பை தொட்டியில் போடப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை தூய்மை பணியாளர் ஒருவர் மீட்டு கொடுத்துள்ளார்.
ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்
சென்னை விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் தேவராஜ். இவர் நேற்று தவறுதலாக குப்பைகளுடன் சேர்த்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை மாநகராட்சி தனியார் நிறுவன குப்பை வாகனத்தில் கொட்டியுள்ளார்.
பின்னர், வீட்டில் இருந்த வைர நெக்லஸை தேடியுள்ளார். அப்போது தான் குப்பையுடன் சேர்த்து கொட்டப்பட்டிருக்கலாம் என்பதை அறிந்த தேவராஜ், தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
பின்னர், நடந்த சம்பவத்தை கூறி உதவி கோரியுள்ளார். இதையடுத்து, அந்நிறுவனத்தின் சார்பில் அப்பகுதியில் குப்பை சேகரித்து வரம் தூய்மை பணியாளர் அந்தோணி சாமி என்பவர் அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளார்.
அப்போது, குப்பையுடன் கிடந்த வைர நெக்லஸை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தூய்மை பணியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.