;
Athirady Tamil News

”ஒன்றரை ஆண்டு ஆயிடுச்சு..” வேங்கைவயல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

0

வேங்கைவயல் விவகாரம் வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஓராண்டாகியும் இந்த சம்பவத்திற்கு குற்றவாளிகள் யார் என கண்டுப்பிடிக்க முடியாமல் போலீசார் தினரின் வருகின்றனர் . இந்த சுழலில் தான் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே. குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி,

“கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நிகழ்வு தொடர்பான வழக்கின் விசாரணை 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் உயர் நீதிமன்றமும் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுச்செய்யப்பட்டது .

உயர்நீதிமன்றம் அதிரடி
ஆனால் இதுநாள் வரை இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை,” என்று குற்றசாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “ஒரு நபர் ஆணையம் மற்றும் சிபிசிஐடி தரப்பில் அவ்வப்போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கை தயாராக உள்ளது. எனவே, அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்,” என கேட்டுக் கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்கும் படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.