யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் சங்கத்தின் புதிய நிர்வாகம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் யாழ்.மாவட்ட சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்ற நிர்வாக தெரிவில் செயலாளராக நி. மேரி ரஞ்சினியும், தலைவைராக சிவபாதம் இளங்கோதையும் ,உப தலைவராக சு. கஜேந்திரனும் உப செயலாளராக புஸ்பலதாவும், பொருளாளராக விஜயபாமாவும் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து ஏனைய நிர்வாக குழு தெரிவுகள் இடம்பெற்றன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி தொடரும் பயணத்தினை தொடர்ந்தும் தாம் முன்னெடுத்து செல்ல உள்ளதாகவும் , தம் மீது சர்வதேச நாடுங்கள் கரிசனை கொண்டு , தமக்கான நீதியினை பெற்று தர வேண்டும் என புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சி. இளங்கோதை தெரிவித்தார்.