புதிய அமெரிக்க ஜனாதிபதி பெண் தான், கமலா ஹாரிஸ் அல்ல: அஸ்பாரகஸ் ஜோதிடர் கணிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு தமக்கு அதிகம் என நம்பும் டொனால்டு ட்ரம்புக்கு மிச்செல் ஒபாமா அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார் என அஸ்பாரகஸ் ஜோதிடர் கணித்துள்ளார்.
ஜனாதிபதியாக ஒரு பெண்
அதாவது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஒரு பெண் பொறுப்பேற்பார் என்றும் அது கமலா ஹாரிஸ் அல்ல மாறாக மிச்செல் ஒபாமா என அஸ்பாரகஸ் ஜோதிடர் என அறியப்படும் Jemima Packington கணித்துள்ளார்.
நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில், டொனால்டு ட்ரம்ப் அல்லது கமலா ஹாரிஸ் என இருவருக்கும் வாய்ப்பில்லை என்றே குறிப்பிட்டுள்ளார். யாரும் எதிர்பாராமல் மிச்செல் ஒபாமா களத்திற்கு வருவார், டொனால்டு ட்ரம்பிடம் இருந்து வெற்றி வாய்ப்பை அவர் தட்டிச் செல்வார் என்றும் Jemima Packington தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் ஜனாதிபதி கனவு
ஆகஸ்டு மாதம் நடக்கவிருக்கும் கட்சி மாநாட்டில், அதிரடி திருப்பமாக மிச்செல் ஒபாமா ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் கணித்துள்ளார்.
இதனால், டொனால்டு ட்ரம்பின் ஜனாதிபதி கனவு அத்துடன் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Brexit, ராணியாரின் மறைவு மட்டுமின்றி, ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகும் முன்னரே, அமெரிக்காவில் பெண் ஒருவர் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வருவார் என கடந்த வாரமே அறிவித்தவர் Jemima Packington.