;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ்: நெகிழ்ச்சியில் பூர்வீக கிராம மக்கள்

0

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கமலா ஹாரிஸின்(Kamala Harris) பெயர் முன்மொழியப்பட்டமையானது அவரது பூர்வீக கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் 5ம் திகதி தேர்தல் நடக்கவுள்ளது.

ஜனநாயக கட்சி சார்பில் 2வது முறையாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் தேர்தலில் களமிறங்க இருந்த நிலையில் ஜோ பைடன் (Joe Biden)தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி
அதனை தொடர்ந்து தற்போதைய துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக வாய்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த மாதம் 19ம் திகதி சிகாகோவில் நடக்க உள்ள ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில்தான் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்நிலையில்,கமலா ஹாரிஸின் பூர்வீக கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பைங்காநாடு துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தாய் வழி தாத்தா பிவி கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சிவில் சர்வீசில் கோபாலன் பணியாற்றிய இவர் 1930ம் ஆண்டு ஜாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுக்க அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டவர்.

பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார், இவரின் மகளான சியாமளா ஜமைக்கா நாட்டை சேர்ந்த கருப்பினத்தவரான டொனால்டு ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் மகள் தான் கமலா ஹாரிஸ்.

கிராம மக்கள் நெகிழ்ச்சி

இதற்கமையவே இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கவுள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தவுள்ளதாக அக்கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயிலில் வேண்டுதல் செய்கிறோம். அவர் வெற்றி பெறுவார். வெற்றி பெற்ற பிறகு அவர் பூர்வீக கிராமத்துக்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

ஹாரிஸ் ஜனாதிபதியானால் இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்பு மேலும் வலுப்பெறும். அவரது தேர்தல் வெற்றி செய்திக்காக காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.