;
Athirady Tamil News

பாரீஸ் நகரில் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கொடூரம்… கபாப் கடையில் உதவிக்கு கெஞ்சிய துயரம்

0

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பாரீஸ் நகரில் சுற்றுலாப் பயணி ஒருவர் 5 பேர் கொண்ட குழுவால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை 5 மணியளவில்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயது பெண் தாக்குதலைத் தொடர்ந்து கிழிந்த ஆடையுடன், உள்ளாடைகளை கையில் பிடித்துக்கொண்டு ஒரு கபாப் கடைக்குள் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த கொடூரமான தாக்குதல் நடந்ததாகவும், அதில் ஒருவர் தனது அலைபேசியையும் எடுத்துச் சென்றதாகவும் அவர் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

கொடூரமான சம்பவத்தை அடுத்து அந்த பெண் ஒருவழியாக கபாப் கடைக்குள் புகுந்து தப்பியதாக தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவசர மருத்துவ உதவிக் குழுவினர், தொடர்புடைய பெண்ணை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Fete de Musique இசை விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு பாரீஸ் நகரில் அவர் தங்கியுள்ளார். மட்டுமின்றி, தாக்குதல் நடந்த அன்று அவர் அவுஸ்திரேலியா திரும்ப இருந்ததாகவும் கூறப்படுகிறது.

உதவிக்கு கெஞ்சும் காட்சிகள்
இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த பெண் தற்போது அவுஸ்திரேலியா புறப்பட்டுள்ளாரா என்பது தொடர்பிலும் தகவல் இல்லை.

வெள்ளியன்று தொடங்கும் 2024 ஒலிம்பிக் விழாவிற்கு மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவேற்க பாரீஸ் நகரம் தயாராகி வரும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இதனிடையே, அந்த ஐவர் குழுவிடம் இருந்து தப்பி, அவர் அருகாமையில் உள்ள கபாப் கடையில் உதவிக்கு கெஞ்சும் காட்சிகள் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.