;
Athirady Tamil News

6 கடிதங்கள்… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை விதிப்பு

0

உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதை தடுக்கும் பொருட்டு கடித வெடிகுண்டுகளை அனுப்பிய ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

6 கடித வெடிகுண்டுகள்
ஸ்பெயின் நாட்டின் Miranda de Ebro பகுதியை சேர்ந்த 76 வயது Pompeyo González Pascual என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கே 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2023 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட இவர் 2022ல் பிரதமர் Pedro Sánchez, அமெரிக்கா மற்றும் உக்ரைன் தூதரகங்கள், ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர் Margarita Robles, ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனமான Instalaza மற்றும் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் என 6 கடித வெடிகுண்டுகளை அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ள ஸ்பெயின் நாட்டின் முதன்மையான குற்றவியல் நீதிமன்றம், பயங்கரவாதச் செயல்களுக்காக 10 ஆண்டுகளும் தீவிரவாத நடவடிக்கையின் பொருட்டு வெடிப்பொருட்களை பயன்படுத்தியதற்காக 8 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்துள்ளது.

2022 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அனுப்பப்பட்ட இந்த கடிதங்களால், உக்ரைன் தூதரக ஊழியர் ஒருவர் லேசான காயங்களுடன் தப்பியிருந்தார். ஆனால் எஞ்சிய கடிதங்கள் அனைத்தும் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டது.

ரஷ்ய ஊடக செயலிகள்
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு González மறுப்பு தெரிவித்திருந்தாலும், ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராக இருந்துள்ளது. மேலும், அவரது அலைபேசியில் ரஷ்ய ஊடக செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டிருந்ததுடன்,

வயதானவர்களுக்கு சிறை தண்டனையால் ஏற்படும் சிக்கல் தொடர்பிலும், வெளிநாட்டவர்கள் ரஷ்யாவில் குடிபெயர்வதற்கான விதிமுறைகள் குறித்தும் இணையத்தில் பலமுறை தரவுகளை தேடியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது..

உக்ரைனில் போர் முடிவுக்கு வரும் அவரையில் தங்களின் ஆதரவு தொடரும் என்றே ஸ்பெயின் உறுதி அளித்துள்ளது. மட்டுமின்றி, உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் பொருட்டு 1 பில்லியன் யூரோ தொகையை பிரதமர் Pedro Sánchez ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.