பொலிஸ் இருப்பாங்க Helmet போடுங்கன்னு Google Map-ல் எச்சரித்த இளைஞர்.., உடனே அமைச்சர் செய்த செயல்
Google Map செயலியில் பொலிஸ் இருப்பாங்க Helmet போடுங்கன்னு இளைஞர் ஒருவர் எச்சரிக்கை விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Google Map செயலியில் எச்சரிக்கை
சாலை விபத்துக்களை தடுப்பதற்காக இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் இருவருமே தலைக்கவசத்தை அணிய வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
ஆனால், இதனை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைவான அளவே உள்ளது. சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணியாமல் விதிமுறையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இவர்களுக்கு உதவிடும் வகையில் பயனர் ஒருவர், Google Map செயலியில் வேளச்சேரியை ஒட்டிய பகுதி ஒன்றில் ‘போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அமைச்சர் டிஆர்பி ராஜா, “சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து பொலிஸார் இருக்கிறார்கள் என்று Google Map செயலியில் இடம்பெற்றால் பலரும் ஹெல்மெட் அணிய தொடங்குவார்கள்.
ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முயற்சியை கையாளலாம்” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.