;
Athirady Tamil News

பட்ஜெட் 2024 – எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது – உயருகிறது?

0

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்
தாக்கல் நாட்டில் 3-வது முறையாக கூட்டணி ஆட்சியமாக அமைந்துள்ளது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி. முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் எந்தெந்த பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை குறித்து தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

விலை குறையும்
மருந்துகளுக்கான விலைகள் குறையும். Customs duty குறைக்கப்பட்டுள்ளதால், நேரடியாக இறக்குமதி செய்யப்படும் கான்சர் மருந்துகளின் விலை குறைகிறது.

இதே போல, Customs duty குறைக்கப்படுவதால் அதனை பொருட்டு மொபைல் போன்களின் விலையும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகப்படியாக நாட்டில் வெளிநாட்டு மொபைல் போன்களே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் மற்றும் வெள்ளி மீது Import Duties’ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6%வரை குறைத்து அறிவிப்பை இன்று மக்களவையில் தெரிவித்தார். இதன் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் விலை குறையும்.

தோல் பொருட்களின் விலைகளும் குறைகின்றன. இத்துடன் சேர்த்து seafood அதாவது கடல் சார் உணவுகளின் விலையும் கணிசமாக குறைகின்றன.

விலை அதிகரிப்பு
Telecom பொருட்களின் மீதான வரி விதிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்டர்நெட் சேவைகளை வழங்கும் modem போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுகிறன.

பிளாஸ்டிக் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு இருக்கும் என நம்பப்படுகிறது. கூடுதலாக வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் Ammonium Nitrate பொருட்கள் மீதான வரி அதிகரிப்பட்டுள்ள நிலையில், அவையும் பெரிதாக மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.