கலாசாலையில் ஆடிப்பிறப்பு விழா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கவின்கலை மன்றம் முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா 24.07.2024 காலை கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் ரதிலஷ்மி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஷ் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலிகாமம் கிழக்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் பா.ஜெயதாசும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுகளை ஆரம்பக் கல்விநெறி ஆசிரிய மாணவி திருமதி மைதிலி கோகுலக்கண்ணன் நெறிப்படுத்தினார். வரவேற்புரையினை விஞ்ஞானநெறி ஆசிரிய மாணவி கிட்டா தவராசாவும் பிரதி அதிபர் க.செந்தில்குமரன் வாழ்த்துரையையும் விஞ்ஞானநெறி ஆசிரிய மாணவன் இ.செந்தூர்செல்வன் ஆசிரிய மாணவர் உரையையும் விரிவுரையாளர் வேல் நந்தகுமார் ஆடிப்பிறப்புப் பற்றிய சிறப்புரையையும் ஆற்றினர்.
கவின்கலைமன்றக் காப்பாளர் ரஜிதா சின்னதுரை பிரதம விருந்தினரை அறிமுகம் செய்து வைத்ததோடு தொடக்கவுரையையும் ஆற்றினார். நன்றியுரையினை கிறிஸ்தவகல்விநெறி ஆசிரிய மாணவி கமலினி சுதாகர் ஆற்றினார். நிகழ்வின் நிறைவில் கலாசாலை சமூகத்தினர் அனைவருக்கும் ஆடிக்கூழ் பரிமாறப்பட்டது.