;
Athirady Tamil News

யாழில் போதையில் சென்றவருக்கு விளக்கமறியல்!

0

யாழ்ப்பாண நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்கு மதுபோதையில் சென்றவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது குறித்த நபர் மதுபோதையில் வந்துள்ளார்.

மதுபோதையில் மன்றுக்கு விசாரணைக்கு வந்ததை அடுத்து, அவரை கைது செய்த நீதிமன்ற பொலிஸார் மன்றில் அவரை முற்படுத்தினர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.