கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன்விழா – மூன்று நாள்கள் விழா இடம்பெறுகின்றது
கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்:வுகள் அதிபர் கி. விக்னராஜா தலைமையில் எதிர்வரும் 26, 27, 28 ஆம் திகதிகளில் காலை மாலை அமர்வுகளாக இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் வெள்ளி காலை நடைபவனி இடம்பெறும் இதன் பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் கி. சின்னராசா கலந்து கொள்வார். அன்று மதியம் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் க. சிவேந்திரம் பிரதம விருந்தினராகப் பங்கேற்க மரநடுகை நிகழ்வு இடம்பெறும் அன்று மாலை கிளிநொச்சி தெற்கு கல்வி வலய உடற்கல்விப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ப. பார்த்திபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி நடைபெறும்.
மறுநாள் சனிக்கிழமை இலங்கையின் நிலவுருவ அமைப்பு பாடசாலையில் நிறுவப்பட்டுக் கையளிக்கப்படும் இதன் பிரதம விருந்தினராக மருத்துவர்களான சாந்தகுணாகரன் தம்பதியர் கலந்து கொள்வர். அன்று மதியம் விஞ்ஞான ஆய்வு கூடத் திறப்பு விழா இடம்பெறும். இதன் பிரதம விருந்தினராக வட மாகாண விஞ்ஞானபாட பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ. நிருபராணி கலந்து கொள்வார். அன்றுமாலை வைத்தியர் வி. ஜெக்கப்சன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள பரிசளிப்பு விழா நடைபெறும்.
நிறைவுநாள் ஞாயிற்றுகிழமை (28.07.2024) காலை பொன்விழா மலர் வெளியீடு இடம்பெறும். இதன் பிரதம விருந்தினராக கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் பிரதீபா காயத்திரி கஜபதி கலந்து கொள்வார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் மலரின் வெளியீட்டுரையை ஆற்றுவார்.
அன்று மாலை பாடசாலைக்குப் பெருமை சேர்த்தோருக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறும். இதன் பிரதம விருந்தினராக கிளிநொச்சி தெற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ந. காண்டீபன் கலந்து கொள்வார். அன்றையதினம் சிறப்பு நிகழ்ச்சியாக செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனை நடுவராகக் கொண்டு சொற்சமர் விவாத நிகழ்ச்சி இடம்பெறும்.