;
Athirady Tamil News

இலங்கையில் முதலாவது துரியன் மாதிரி செய்கை வலயம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

0

இலங்கையில் (Sri Lanka) முதலாவது துரியன் மாதிரி செய்கை வலயத்தை ஆரம்பிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஹார்ட்லேண்ட் அதிகார சபையின் பங்களிப்பின் கீழ் ஹடுகல, எகொடபத்த, தெஹிகஹஹேன மற்றும் வாரபிட்டிய உள்ளிட்ட நான்கு கிராமங்களை மையமாகக் கொண்டு இந்த பயிர்ச்செய்கை வலயத்தை நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து தரம்
அத்தோடு, ஊட்டச்சத்து தரம் காரணமாக துரியன் உலகில் அதிகம் தேவைப்படும் பழமாக கருதப்படுகின்றமையினால் வலஸ்முல்லையில் முதலாவது துரியன் மாதிரி செய்கை வலயத்தின் செயற்பாடுகள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும், ஏற்றுமதி இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள துரியன் மாதிரி சாகுபடி வலயத்தின் கீழ் முதற்கட்டமாக 2500 துரியன் செடிகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.