கொழும்பிற்கு வந்துள்ள அமெரிக்க ஏவுகணை அழிப்பான் கப்பல்
அமெரிக்க(us) கடற்படையின் யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) சம்பிரதாயமுறை பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் கூற்றுப்படி, 155 மீ நீளமுள்ள அர்லீ பர்க் கிளாஸ் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் கப்பல் 323 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தில்
கப்பலின் தலைவர் ஜொனாதன் பி கிரீன்வால்ட், இலங்கையின் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்தித்துள்ளார்.
யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி கொழும்பு துறைமுகத்தில் தங்கி நிற்கும்போது வீரர்கள் இலங்கையில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க கடற்படைக் கப்பல் வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.