ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிக்கும் நாடு
சீனாவில் (china) பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1949ஆம் ஆண்டு 36 ஆண்டுகளாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு
இந்த 75 ஆண்டுகளாக ஓய்வு பெறுவதற்கான வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 என்ற நிலையில் மாற்றமில்லை.
இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஓய்வு வயது வரம்பை இன்னும் 5 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கவிருப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 65 ஆக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.