உச்சக்கட்ட வன்முறையின் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் பங்களாதேஷ்
பங்களாதேஷில்( Bangladesh) மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பிறகு தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 இடஒதுக்கீடு இரத்து செய்யக்கோரி கடந்த 15 ஆம் திகதி மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டம்
இதன் மூலம் கடந்த 16 ஆம் திகதியில் இருந்து தற்போது வரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம், வேலைவாய்ப்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 இடஒதுக்கீடு இரத்து செய்யப்படும் என அறிவித்தது.
இதனால் தற்போது பங்களாதேஷில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இயல்பு நிலை
இதனை தொடர்ந்து டாக்கா மற்றும் வங்காளதேசத்தின் 2-வது மிகப்பெரிய நகரமான சட்டோகிராமில் சில பகுதிகளில் இணையசேவை வழங்கப்பட்டது.
அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் சில மணி நேரங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும், நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்னும் இணையசேவைகள் முடக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது.
அதிகாரிகள் ஊரடங்கை ஏழு மணி நேரம் குறைத்துள்ளதால் சாலைகள் கார்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.