அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ்(Kamala Harris) ட்ரம்பை(Donald Trump) பின்னுக்கு தள்ளியுள்ளார்.
அமெரிக்க(USA) ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ளது.குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் களம் இறங்குகிறார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் துணை ஜனாதிபதியாகவுள்ள கமலா ஹாரிஸ் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் சமீபத்திய அறிக்கையையொன்றில் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், Ipsos தேசிய கருத்துக்கணிப்பின்படி, ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். பைடன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
கருத்துக்கணிப்பில், 42 சதவீத மக்கள் டொனால்ட் ட்ரம்பை ஆதரித்துள்ளனர், 44 சதவீதம் பேர் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளனர். இதற்கு முன்னதாக, இம்மாதம் 15-16 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ஜூலை 1-2 வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ட்ரம்ப் 44 சதவீதமாக இருந்தார்.
கருத்துக் கணிப்பு
தற்போது கமலா ஹாரிஸின் ஆதரவு அதிகரித்து வருவதாக தேசிய அளவிலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப்புகளில், 56 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸின் வேட்புமனு மீது ஆர்வம் காட்டிள்ளதாக கூறப்படுகின்றது.
கமலா ஹாரிஸ் மனதளவில் வலிமையானவள் என்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவள் என்றும் அமெரிக்கர்கள் நம்புகிறார்கள்.
இருப்பினும், 78 முதல் 49 சதவீத வாக்காளர்கள் ட்ரம்ப் குறித்து இதே கருத்தை தெரிவித்தனர். 22 சதவீதம் பேர் மட்டுமே ஜோ பைடனைப் பற்றிய அதே கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மக்கள் ஆதரவு
மற்றுதொரு ஊடகத்தின் கருத்துக் கணிப்பின்படி, தேர்தல் காலத்தில் இருந்து விலகும் பைடனின் முடிவு சரியானது என்று 87 சதவீத அமெரிக்கர்கள் கருதுவதாக கூறப்படுகின்றது.
41 சதவீதம் பேர் பைடனின் முடிவு நவம்பர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் ஜனாதிபதி வேட்புமனு ஏறக்குறைய முடிவாகியுள்ளது. ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்குத் தேவையான 1,976 பேரை விட, அதிக பிரதிநிதிகள் அவருக்குத் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.