பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம்: எதிர்கட்சி மீது குற்றச்சாட்டும் பிரதமர்
பங்களாதேஷில் (Bangladesh) இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் அந்த நாட்டின் எதிர்க்கட்சியின் சூழ்ச்சி காணப்படுவதாக பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) குற்றம் சாட்டியுள்ளார்.
தொழில் ஒதுக்கச் சட்டம் தொடர்பாக எழுந்த எதிர்ப்பின் காரணமாக அந்நாட்டில் கடுமையான வன்முறைகள் பதிவாகி இருந்தன.
ஊரடங்கு சட்டம்
இதனால் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த நாட்டின் வர்த்தகத் தரப்பினருடன் கலந்துரையாடிய ஷேக் ஹசீனா, நாட்டின் பாதுகாப்பு கருதி நடைமுறைபடுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், நாட்டின் நிலைமை சீரடையும் போது முற்றாக தளர்த்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த போராட்டமானது வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.