;
Athirady Tamil News

ஜேர்மனியில் மூடப்படும் பழமையான மசூதி: விமர்சித்துள்ள ஈரான்

0

ஜேர்மனியின் (Germany) மிகப் பாரிய மற்றும் பழமையான ஹம்பர்க் மசூதி (Islamic Center Hamburg) மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Blue Mosque என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் இந்த மசூதியானது ஷியா முஸ்லிம் அமைப்பால் நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரான் (Iran) அரசுடன் அதற்கு ஆழமான தொடர்பு இருப்பதாகவும் ஜேர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஷியா முஸ்லிம் அமைப்பானது ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பை ஆதரிப்பதாகவும், ஈரானில் இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் ஜேர்மன் அரசு குறிப்பிட்டுள்ளனர்.

எச்சரிக்கை
2020 இல் ஜேர்மனி அரசு ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடைசெய்துள்ளது.

சர்வதேச ஊடகமொன்று வெளியிட்ட அறிக்கையின் படி ஜேர்மனியில் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 54 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஈரான் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளதோடு, மோசமான விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.