;
Athirady Tamil News

100-க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள் தரக் கட்டுப்பாட்டில் தோல்வி: இந்திய நிறுவனங்களுக்கு பின்னடைவு

0

இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இருமல் சிரப்-கள் தரக் கட்டுப்பாட்டில் தோல்வியடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரக் கட்டுப்பாட்டில் தோல்வி
இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் இருமல் சிரப்-கள்(cough syrup) தரக் கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக அரசு தரவுகளை மேற்கோள் காட்டி Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இருமல் சிரப்-கள்( Gambia, Cameroon மற்றும் Uzbekistan ஆகிய நாடுகளை சேர்ந்த 141 குழந்தைகள் உயிரிழந்த மருந்தில் காணப்பட்ட அதே நச்சுப் பொருட்கள் இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவித்துள்ளது.

Gambia நாட்டில் குழந்தைகள் உட்கொண்ட இந்திய தயாரிப்பு இருமல் சிரப்-களில் Diethylene Glycol (DEG) அல்லது Ethylene Glycol என்ற நச்சுப் பொருட்கள் கலந்திருந்ததால், அவர்களுக்கு தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக முந்தைய செய்திகள் தெரிவித்து இருந்தன.

முன்னணியில் இந்திய மருத்துவ துறை
சுமார் 50 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்திய மருந்துத் துறை, அளவில் உலகில் மூன்றாவது பெரிய நாடாகும்.

இது உலகளாவில் பொது மருந்துகளின் முன்னணி சப்ளையராகவும், உலக தடுப்பூசி தேவையில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை வழங்குகிறது.

கூடுதலாக, அமெரிக்காவின் பொது மருந்து தேவையில் சுமார் 40% மற்றும் இங்கிலாந்தின் அனைத்து மருந்துகளில் கால் பகுதியை இந்தியா பூர்த்தி செய்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.