ஜேர்மனி செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி
ஜேர்மனியில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும் என்னும் விதி உள்ளது.
அந்தத் தொகை, செப்டம்பர் மாதத்திலிருந்து அதிகரிக்கப்பட உள்ளது.
Blocked Account
ஜேர்மனியில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும்.
அந்த வங்கிக் கணக்கு, Blocked Account என அழைக்கப்படுகிறது.
அதாவது, நீங்கள் ஜேர்மனியில் தங்கியிருக்கும்போது, உங்கள் செலவுக்காக போதுமான பணத்தை நீங்கள் தயாராக வைத்திருக்கிறீர்கள் என்பதை ஜேர்மன் அதிகாரிகளுக்கு உறுதி செய்வதற்காக இந்த தொகை.
நீங்கல் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, அந்தத் தொகையை நீங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருப்பதைக் காட்டினால்தான் உங்களுக்கு விசா வழங்கப்படும்.
செப்டம்பர் மாதத்திலிருந்து அதிகரிப்பு
தற்போது இந்தத் தொகை, 11,208 யூரோக்களாக உள்ளது. (ஒரு மாதத்துக்கு என்றால், 934 யூரோக்கள்).
அது, 2024ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்திலிருந்து 11,904 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது. ஆண்டுக்கு 11,904 யூரோக்கள், ஒரு மாதத்துக்கு என்றால், 992 யூரோக்களாக இந்த தொகை உயர்த்தப்பட உள்ளது.