அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை: வெளியான தகவல்
மே மற்றும் ஜூன் மாதங்களில் பணிக்கு வராத சில பகுதிகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ளார்.
விசேட விடுமுறை
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.
அந்த மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலைத் தடைகள் காரணமாக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்லும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைபட்டதால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அதிகாரிகளுக்கு இந்த சிறப்பு விடுமுறை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதேவேளை அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகளை கோரி உள்ளமை குறிப்பிடத்தக்கது.