பாகிஸ்தான் இளைஞரை சரமாரியாக தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர்: வலுக்கும் கண்டனங்கள்!!!
பிரித்தானியாவின் (UK) மான்செஸ்டர் விமானநிலையத்தில் (Manchester Airport) காவல்துறை உத்தியோகத்தர்களால் பாகிஸ்தானை (Pakistan) சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அந்தவகையில், காவல் உத்தியோகத்தர் ஒருவர் நபர் ஒருவரின் தலையில் காலால் சரமாரியாக தாக்குவதனை குறித்த காணொளியில் காணமுடிகிறது.
இந்த காணொளி வெளியானதை தொடர்ந்து பிரித்தானிய காவல்துறையினர் சரியான முறையில் தங்களது பலத்தை பயன்படுத்துகின்றார்களாக என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் சர்ச்சையும் எழுந்துள்ளது.
காவல் உத்தியோகத்தர்
இந்தநிலையில், காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், மற்றும் பெண் காவல் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மான்செஸ்டர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கு இனவெறியே காரணம் என மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.