விம்பிள்டனில் இளவரசி கேட்டைக் கண்டு நெகிழ்ந்த ஹரி: சமரசம் செய்ய எடுத்துள்ள முயற்சி
பிரித்தானிய இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இப்போதைக்கு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, மன்னர் சார்லசுடைய பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார் கேட்.
அடுத்து, இளவரசி கேட்டுக்கு மிகவும் பிடித்த விம்பிள்டன் போட்டிகளைக் காண அவர் வருவாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
மனதைக் கவர்ந்த கேட்
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி விம்பிள்டன் போட்டிகளைக் காணவந்தது மட்டுமின்றி, போட்டியில் வென்றவருக்கு இளவரசி பரிசும் வழங்க, அவரது ரசிகர்கள் மனம் நெகிழ்ந்துபோனார்கள்.
மனம் நெகிழ்ந்தது அவரது ரசிகர்கள் மட்டுமல்ல. தனது அண்ணியான இளவரசி கேட் விம்பிள்டன் போட்டியில் கலந்துகொண்டதை தொலைக்காட்சியில் பார்த்த இளவரசர் ஹரியும் மனம் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும்போயிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, ஹரி தன் அண்ணி கேட்டுக்கு ஒரு செய்தி அனுப்பியுள்ளாராம், விம்பிள்டனில் உங்களைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ள ஹரி, இளவரசி கேட்டுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், இது குடும்பத்துடன் சமரசம் செய்வதற்கான நேரம் என்பதை ஹரி உணர்ந்துகொண்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆகவே, ஹரி தனது அண்ணன் மற்றும் அண்ணியுடன் சமாதானம் செய்துகொள்ள திட்டமிட்டுவருவதாகவும் அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளார்கள்.