அம்பானியின் ரூ.15,000 கோடி மதிப்புள்ள Antilia வீடு! இதன் கரண்ட் பில் எவ்வளவு வரும்?
தனது மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்திய முகேஷ் அம்பானி Antilia வீட்டிற்கு எவ்வளவு மின்கட்டணம் செலுத்துகிறார் என்பதை பார்க்கலாம்.
சில தினங்களுக்கு முன்பு அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்திற்கு ரூ.5000 கோடியை முகேஷ் அம்பானி செலவிட்டார் என்றும் கூறப்படுகிறது. உலகத்தின் ஆடம்பரமான திருமணமாக இந்த திருமணம் பார்க்கப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களாக திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
Antilia வீட்டின் கரண்ட் பில்
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் ஆண்டிலியா (Antilia) என்னும் பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வருகிறார்.
27 மாடிகள் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு ரூ.15,000 கோடியாகும். இங்கு மினி தியேட்டர், 9 பெரிய லிஃப்ட், நீச்சல் குளம், ஹெலிபேடுகள்,100க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் இடம் என பல ஆடம்பர வசதிகள் உள்ளன.
4 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டை கட்டி முடிப்பதற்கு 6 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வீட்டில் சுமார் 600 பேர் பணிபுரிகின்றனர் என்றும் கூறப்படுகிறது. அவர்களில் சிலர் லட்சங்களில் சம்பளம் வாங்குகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த வீடு மிக உயரமானது என்பதால் உயர் அழுத்த மின் இணைப்பு கட்டாயம் தேவைப்படும். இந்த வீட்டிற்கு மும்பையில் 7000 நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மின்சாரம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 6,37,240 யூனிட் மின்சாரம் பயன்படுத்தபடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் மின் கட்டணம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.