Facebook காதல் TO ஓன்லைன் திருமணம்! போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தானுக்கு ஓட்டம் பிடித்த இந்திய பெண்
Facebook மூலம் பழகிய காதலனை சந்திக்க இந்திய பெண் ஒருவர் போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
Facebook காதல்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, தானே நகரைச் சேர்ந்தவர் நக்மா நூர் மஃஸூத் அலி. அதேபோல பாகிஸ்தான் நாட்டில் அபோட்டாபாத் (Abbottabad) நகரில் வசித்து வருபவர் பாபர் பஷீர்.
இவர்கள் இருவரும் கடந்த 2021 -ம் ஆண்டில் Facebook மூலம் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு செல்போன் மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர்.
இதையடுத்து தனது காதலனை சந்திப்பதற்காக நக்மா நூர் பாகிஸ்தான் விசாவை விண்ணப்பித்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்ட நிலையில் தனது பெயரை சனம் கான் ரூக் என்று ஆதார் கார்டில் மாற்றியுள்ளார்.
பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் பாபர் பஷீரை ஒன்லைன் மூலம் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து, போலி ஆவணங்களை தயார் செய்து பாகிஸ்தான் சென்று இந்தியா திரும்பியுள்ளார்.
அதாவது கடந்த ஜூலை 17 -ம் திகதி நாடு திரும்பிய நிலையில் போலி ஆவணங்களால் நக்மா நூர் பொலிஸில் சிக்கியுள்ளார். இந்நிலையில், பொலிஸார் நக்மாவை விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, தனது மகள் கடந்த 2015 -ம் ஆண்டு பெயரை மாற்றியதாக அவரது தாய் கூறியது குறிப்பிடதக்கது.