;
Athirady Tamil News

இறந்ததாக அறிவித்த அரசு – உயிரோடு இருப்பதை நிரூபிக்க நபர் செய்த செயல் -அதிர்ந்த போலீசார்!

0

உயிருடன் இருப்பதை நிரூபிக்க நபர் ஒருவர் குற்றங்களில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நபர் செய்த செயல்
ராஜஸ்தானில் அரசால் இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட பாபுராம் என்பவர், மிதோரா கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு அரசு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் தனது அடையாளத்தையும், சொத்துக்களுக்கான உரிமையையும் பாபுராம் இழந்துள்ளார்.

கடும் துன்பத்தை அனுபவித்த அவர் அரசின் இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்கு சட்ட வழிகளை நாடியுள்ளார். ஆனால் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த பாபுராம் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதற்கு வித்தியாசமான வழிமுறையை கண்டறிந்தார்.

அதிர்ந்த போலீசார்
அதன்படி, பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் பள்ளி வளாகத்தில் புகுந்து பலரையும் பாபுராம் தாக்கியுள்ளார்.பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் பள்ளி வளாகத்தில் புகுந்து பலரையும் பாபுராம் தாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பாபுராமை கைது செய்தனர்.

போலீசார் அவரை கைது செய்தபோது, “போலீசார் என்னை கைது செய்தால்தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க முடியும்” என்று பாபுராம் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க செல்போன் டவரில் ஏறி மிரட்டிய பாபுராம்,

கடைசியாக பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் பாபுராம் கூறிய விவரங்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.