வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் குடித்தால் பயன் என்ன? மருத்துவ விளக்கம்
நாம் காலையில் நித்திரை விட்டு எழும் போது டீ, காபி குடிப்பது உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை தராது. ஆனால் இதை தான் அனைவரும் விரும்புகின்றனர்.
ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்பதற்கு நாம் சிறந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம்.
ஒரு ஆரோக்கிய நபரின் உணவுப்பழக்க வழக்கத்தை கேட்டு அறிந்தால் அது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.
அந்த வகையில் காலையில் வெறும் வயிற்றில் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொண்டால் உடலுக்கு என்னென்ன ஆரோக்கியம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியம்
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆலிவ் ணெ்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்கு கலக்கி வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
இப்படி குடித்து வந்தால் நான்கு வாரங்களில் நல்ல ஒரு மாற்றத்தை உடலில் அவதானிக்கலாம். ஆலிவ் எண்ணெய் சரும பளபளப்பிற்கும் குடலின் சீரான இயக்கத்திற்கும் உதவும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.
இது குடலில் பங்களிக்கும் போது இயற்கையான லூப்ரிகண்டாகச் செயல்பட்டு, மலம் வெளியேறுவதை எளிதாக்க உதவுகிறது. பித்த உற்பத்தியைத் தூண்டுகிறது.
இதை தவிர இதிலிருக்கும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட், சருமத்தை ஈரப்பதமாக்கவும், ஊட்டமளித்து ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்துகின்றன. எலுமிச்சை சாறில் அசற்றிக் அமிலம் காணப்படுவதால் இது நல்ல செரிமானத்தை ஊக்கப்படுத்துகிறது.
உடலில் செரிமானம் என்பது மிகவும் முக்கியம். இதை தவிர இதிலிருக்கும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு முக்கியமானது மற்றும் சரும ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது.
இத்தனை நன்மை கொட்டி க்கிடக்கும் இந்த பானத்தை தினமும் காலையில் குடிப்பது நன்மை தரக்கூடிய ஒன்றாகும்.