வெள்ளலூர் தீ விபத்து: 11 நாள் உணவுக்காக ரூ. 27 லட்சம் செலவு!
வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீ விபத்தின் போது ஏற்பட்ட செலவுகளுக்கு கணக்கு கோரப்பட்டுள்ளது.
கோவையின் வெள்ளலூரில் உள்ள 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
அந்த தீ விபத்தில் சுமார் 40 தனியார் நீர் லாரிகள், 14 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 300 தீயணைப்பு படை வீரர்கள் வரையில் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஏப்ரல் 6ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரையில் 11 நாள்கள் தீயணைப்புப் பணிகள் நடைபெற்றிருந்தன.
இந்நிலையில், தீயணைப்பின்போது ஏற்பட்ட செலவுகள் குறித்த தீயை அணைப்பத்திற்கான கணக்குகள் மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் மொத்த செலவாக ரூ. 76.70 லட்சம் என்று குறிப்பிட்டிருந்தது.
அதில் டீ, காஃபி, பழங்கள் மற்றும் உணவுக்காக மட்டுமே ரூ. 27.51 லட்சம் என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதர செலவுகள்
டீசல் பெட்ரோல், கிரீஸ் – ரூ. 18,29,731
காலணிகள் – ரூ. 52,348
முகக்கவசம் – ரூ. 1,82,900
பொக்லைன் மற்றும் லாரி வாடகை – ரூ. 23,48,661
தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி மற்றும் தனியார் வாகனம்) – ரூ. 5,05,000