தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து சுமந்திரனின் முடிவு!
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவினை தெரிவிக்கப் போவதில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) தெரிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி வேட்பாளர் என்பவர் ஒரு சமூகத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கக் கூடாது.
பொது வேட்பாளர்
குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் சகல சமூகத்தினருக்காகவும் முன்னிலையாக வேண்டும்.
இதனடிப்படையில், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கருத்தியலை ஆதரிக்கவில்லை” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.