எச்.ஐ.விக்கு தடுப்பு மருந்து: கண்டுபிடித்துள்ள தென்னாபிரிக்கா ஆய்வாளர்கள் !
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் எச்.ஐ.வி. (HIV) நோயிற்கான தடுப்பு மருந்தை தென்னாபிரிக்க (South Africa) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்னாபிரிக்காவின் கேப்டவுன் (CAPE TOWN, South Africa) பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த மருந்தை கண்டுபித்துள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
அந்தவகையில், ஆண்டுக்கு இருமுறை என ஊசி மூலமாக செலுத்தப்படும் இந்த மருந்து மூலமாக எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் குணமடைய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், எச்.ஐ.வி. தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக நடத்தப்பட்ட ஆய்வில் குறித்த தடுப்பு மருந்து 100 சதவீதம் செயற்திறனை கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.