;
Athirady Tamil News

ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை நிராகரிக்கும் வெளிவிவகார அமைச்சு!

0

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் (Justin Trudeau) வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

குறிப்பாக, கனடாவில் (Canada) வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் (Sri Lanka) கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் உதவாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

வருடாந்தம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்றும், ஜூலை மாதம் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூரும் தினத்தன்றும் வெளியிடப்படும் அறிக்கைகளில் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதத்தை கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உபயோகித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு
இந்தநிலையில், குறித்த சொற்பதத்தை நிராகரித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுவரும் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும் கூறிவருகிறது.

அந்தவகையில், கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

மேலும் ‘கனடாவில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் பங்களிக்காது’ எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.